தமிழ் கவிதைகள்
மனு போட சொல்லுகிறது
By UNKNOWN
Category: Kadhal • Updated 1 second ago
உன் முகம் காண
மனு போட சொல்லுகிறது
மறைமுகமாய் என் கண்கள்..
பிரித்து படித்த பிறகு
உன் கண்கள் சம்மதத்தை
மனுவில் திருப்பி அனுப்புமா?
இல்லை திருத்தி அனுப்புமா?
அள்ளி தருமா?
இல்லை கிள்ளி தருமா?
இதில் எதுவென்று புரியாமல் ஆவலோடு
காத்திருக்கிறது!..