Loading...
உனக்கு பிடித்தவை
உனக்கு பிடித்த பாடலை
நான் விரும்பி விரும்பி
திரும்ப திரும்ப கேட்கிறேன்
உனக்கு பிடித்த நடிகையின் புகைப்படத்தை
புதிது புதிதாக சேகரிக்கிறேன்
உனக்கு பிடிக்கும் என்று!..
நீ அமர்ந்த இடத்தில் நான் அமர்ந்து பார்க்கிறேன் நிஜத்தில் நீ எவ்வளவு அமைதியானவள் என்று!..
பிறந்தநாள் வாழ்த்துள்
ஏட்டில் எழுதபடாத ஏனைய நாட்களில்
ஏனோ என்னுள் அடிக்கடி நுழையும்
ஓர் அழகிய நாள் அது
கோட்டில் எழுதப்பட்டு
கோடி கோடியாய் கனவுகளை
கொட்டி குவித்து
கோடிக்கணக்கான மக்களில்
கொடிகட்டி பறக்கும் கோட்டையில்
கோவளத்து ராணியாய் வாழ -
நீ உன் அன்னையில் இருந்து தோன்றிய
ஓர் அற்ப்புத நாள் இன்று
பிரியாத புன்னகையோடும்
பிறரரோடு பிரியாத பிரியத்தோடும்
பிரிக்கின்ற பிழைகளை பிரித்து
எந்நாளும் பிரியமானவளாய் வாழ
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துள்!..
உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்
உங்களின் கருத்துக்கள்
Copyright © TamilPrograms.in, All Right Reserved.