மெளனத்தின் அர்த்தம்
எழுத்துக்கள் என்னுடன்
எப்போதும் சண்டை இடுகின்றது..
உன்னை பற்றி எழுதும்போது
என்னை பயன்படுத்த
ஒரு வாய்ப்பு தா என்று!.
நூலகத்தின் நூல்களில் நுணுக்கமாய்
தேடுகிறேன் உன் மெளனத்தின்
அர்த்தத்தை அறிந்து கொள்ள..
இப்படி தேடி தேடி
நான் நூலாய் தெய்வதற்குள்
பல நாளாய் நான் தேடிய அர்த்தத்தை
நீயே எழுதி ஒரு நூலாய் தந்துவிடு கண்ணே!..
அழகான மாய உலகம்
மாயங்கள் நிறைந்த அழகான
மாய உலகம் உன் கண்கள்!..
இதில் மாயமான ஒருவனை மீட்டு தர
மனுபோட்டு மாதங்களாய் காத்திருக்கிறேன்!
உன் கண்கள் யாரும் காணாத காட்சிகளை
என்னுள் காண செய்கிறது!..
யாரும் போகாத இடத்திற்கு
என்னை கூட்டி செல்கிறது
பூக்கள் ஆடும் புல்வெளியில்
பூங்காற்றே என்று எழுத செய்கிறது!..
இனிமையான ஊர்வலம்
முழு நிலவாய் என் நெஞ்சில் நீ குடியேறியதும்
என் மொழியும், ஒளியும் உன்னை
அலங்கரிக்கவே ஆசை கொள்கிறது
என் ஆயுள் முழுவதும்!..
விண்மீன்கள் ஒன்றுகூடி தேர்ந்தெடுத்த என் விண்ணுலக இளவரசி நீ!..
இனி விண்மீன்களை பார்க்கும் போதெல்லாம்
இந்த இளவரசியின் இனிமையான ஊர்வலமே
நெஞ்சில் நினைவிருக்கும்!.
உன் சாயல்
காற்றில் சாய்ந்து சாய்ந்து சிரிக்கையில்
உன் சாயலாகவே தெரிகிறது மலர்கள்..
அதன் நிழலும் உன் பிம்பமாகவே தெரிகிறது..
உன் சாயலை காணாத நேரம் எனக்கு
சங்கடமாகவே செல்கிறது!..
உறக்கத்திலும் உறங்காமல் இறுக்கத்தில்
இருப்பது உன் சிந்தனைகள் மட்டும் தான். மனம் சிதறினாலும் நான் இன்னும் சிந்தாமல்
சிதறாமல் வைத்து இருப்பது உன்
சிந்தனைகளை மட்டும் தான்!..
பால் ஆகாரம்
எனக்கு ஒன்றும் புரியவில்லை..!
இது பெண்ணில் இருக்கும் சத்தியா...?
இல்லை உன்னில் இருக்கும் சக்தியா...?
பால் ஆகாரம், பழ ஆகாரம், பலகாரம் என
பல ஆகாரங்களை எடுத்தும் கூட நான்
ஆற்றல் மிக்கவனாய் உணர்ந்ததில்லை!..
ஆனால் அரை நொடியில்
ஆற்றல் மிக்கவனாய் உணர்கிறேன்
உன்னோடு உரையாடும் போது மட்டும்!..
உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்
Copyright © TamilPrograms.in, All Right Reserved.
உங்களின் கருத்துக்கள்