Loading...
ஓயாத அலைகள்
கண்ணே!..
ஓயாத அலைகள் ஓடி வந்து
உன் குரளின் ஓசையை
குருகுருக்க செய்கிறது
என்று கேட்பேன் என்று!..
மிதக்கிறாய்
மூவிரு திங்களாய் காத்திருக்கிறேன்
உன் திரு முகம் காண..
அன்று முதல் மதியாய் தோன்றியவள்
இன்று முழுமதியாய் மிதக்கிறாய்
என் மனம் என்னும் சமுத்திரத்தில்..
சிணுங்கி கொண்டே இருக்கிறது
சிணுங்கி கொண்டே இருக்கிறது
உன் கைகளில் மட்டுமல்ல
என் கண்களிலும் தான்
அழகிய உன் கண்ணாடி வளையல்கள்!..
பூட்டிகொண்டதாம்
பூப்பதுதான் அழகென்று இருந்த பூக்கள்
ஒரு நாள் வாயை பூட்டிகொண்டதாம்
நம்மையும் ஆள ஒருத்தி இருக்கிறாள் என்று
உன் புன்னகையை கண்டதும்!..
மீன்கள்
காத்து கிடக்கின்றது என் கண்கள்
உன்னில் துள்ளி குதிக்கும்
மீன்களை காண
உன் அழகிய இரு விழிகள்!..
வெள்ளி நட்சத்திரம்
பிறை போன்ற இரு
புருவங்களுக்கு இடையில்
என்றும் பிரியாமல் அவளின்
கையால் தினந்தினம் நெற்றியில்
ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்
ஓர் வெள்ளி நட்சத்திரம்
- உன் அழகிய சந்தனம்
முதல் வரி
நான் தேடி படிக்கும் புத்தகத்தின்
முதல் வரி நீயே..
தென்றல் வீசும்போது
தென்னையில் ஆடும் தேனும் நீயே..
தேரில் அமர்ந்து என்
கோட்டையை பிடித்த தேவியும் நீயே..
புகைப்படம்
மீண்டும் மீண்டும்
என்னை பார்க்க தூண்டும் ஒரே படம்
- உன் புகைப்படம்!..
காணாத கதைகள்
கண்ணே உன் கண்கள் என்ன கம்பனின் நூலகமா..?
இல்லை காளிதாசனின் காவியமா..?
காணும்போதெல்லாம் நான்
காணாத கதைகளை
சலிக்காமல் காதோடு
கதைகின்றது!..
அழகிய மதி
மதிய வேளையில்
மதியை தொலைத்தேன்
மதிலை பார்க்க அல்ல
மாய நதியை பார்க்கவும் அல்ல
நதியில் தோன்றும் அழகிய மதியை பார்க்க!..
ஓசை இல்லா கொலுசு
என் மனம்
ஓசை இல்லா உன் கொலுசை காண
ஓடோடி வருகுது தினம்
அதில் மெல்லிய பாதம் 🐾 பட்டதும்
பறவையாய் 🐦🐝 பறந்து செல்லுது
என்கினும்!.
இதயத்தில் ஜொலிக்கிறாள்
இத்தனை பெரிய உலகில்
எத்தனை கோடி பெண்கள்
இதில்ம் இவள் மட்டும் ஏன் இனிக்கிறாள்..?
எப்பொழுதும் இதயத்தில் ஜொலிக்கிறாள்!..
தாண்டவமாடும் அவள் கண்களை என்னால் தாண்டி போக முடியவில்லை!..
தரணியில் அவதரித்த பூக்களில்
தண்ணியமான பூவினை
நான் கண்டதுமில்லை -
இனி யாரும் கான போவதுமில்லை!..
பூக்களின் இளவரசி அவள்
மௌனத்தில் பூவரசி!.
புரியாமல் பேசிக்கொள்கிறேன்
பேச தெரியாத என்னை
நீ அறியாமல் பேச வைத்து விட்டாய்!.
இப்போது புரியாமல் பேசிக்கொள்கிறேன்
தனக்கு தானே!..
இதில் பாதிக்கப்பட்டவன் நானே.
காரணம் என் கனவில்
தினம் நீ வருவதால் தானே!.
விடிந்ததும் எங்கே செல்கிறாய் மானே
மீண்டும் உனை தேடி வருகிறேன் நானே!
சொட்டும் நீர்
உன் பட்டு கன்னத்தில் பட்டு
வைரங்களாய் கொட்டுகின்றது
சொட்டும் நீர் துளிகள்!..
நீ கழுவிய முகத்தை கண்ணாடியில் காணும்போது!..
மனம் கவர்ந்த பூ
மங்கையராய் பிறந்த யாவரும்
மணக்க தவறாத ஒரே பூ
உன் மனம் கவர்ந்த
மல்லிகை பூ
அற்புதத் தொல்லை
நீ தூங்கும் அழகை காண நான் தூங்கவில்லை!..
என் மனம் ஏங்குவதை காண நீயோ
இங்கு இல்லை!..
உன் விழி கொண்டு வீசாதே
நான் மாட்டிக்கொள்ளும் வில்லை!..
என் மனம் கேட்க துடிப்பதோ
உன் அன்பான சொல்லை!..
இதை செவி கொடுத்து நான் ஒரு நாளும் கேட்டகவில்லை!..
தினம் தினம் ஏன் இந்த அற்புதத் தொல்லை!..
சூடாமணி
காவியமும் ஓவியமும் காணாத
கந்தர்வ நாட்டு அழகியே!.
சூது வாது அறியாத சொப்பனத்தில்
உலவாடும் சுந்தரியே!.
என் கற்பனை கண்ணாடியில் வரைந்த கரைபடியா ஓவியமே!
நீ சூடாமல் சூடாமணியும்
அழகு பெறவில்லை
உன்னுடன் பேசாத பேச்சுக்கள்
இனிக்கவில்லை
உன்னை காணாத நாட்களை
கடக்க முடியவில்லை
உன் ஞாபாகமோ
என் நினைவுகளில் ஓடும்
அன்பு தொல்லை!.
காணாத வேலை
நூலில் சிறை பட்ட பூக்கள்
உன் கூந்தலில் சிரிப்பது எப்போது?
காலையிலா? இல்லை
யாரும் காணாத வேலையிலா?
கோடையின் வெப்பம்
மலரே ஏன் இந்த மௌனம்
கோடையின் வெப்பம் தாலாமல்
நீர் ஓடையில் சென்றுவிட்டாயோ!
நீந்தி நீந்தி சுற்றியதால்
சற்று சோர்ந்து விட்டாயோ!
கோடையின் வாடையில் சிக்கிய
வாடா மலர் கூட வாடி போகலாம்!
ஆனால் என்றும் வாடாத மலர் நீ
அதை தேடாமல் இருத்தல் ஆகுமா?!.
கை பட்ட மயக்கத்தில்
மலர மறந்துவிட்டதாம் மலர்கள்
உன் கை பட்ட மயக்கத்தில்!
சிரிக்க மறந்து விட்டதாம்
உன் சிரிப்பை கண்டா சில நொடிகளில்!
உன் கூந்தலில் மட்டும் ஏன்
பூக்கள் இவ்வளவு மணக்கிறது?
கூந்தலில் சூடியதால்
கூடுதலாக வீசுகிறதாம் நறுமணத்தை
காவலரே இல்லாத சிறை
உன் கண்கள் என்ன காவல் துறையா?
இல்லை நான் காணாத துறையா?
நான் என்ன குற்றம் செய்தேன்?
கண்டதுமே கைது செய்கிறாய்..
உன் கண்களை இமைக்காமல் பார்த்தது குற்றமா?
காவலரே இல்லாத சிறைக்கு
கைதியே காவல் ஆகுமிடம்
இதய சிறையில் மட்டும் தான்!.
எந்த அறையில் பூட்டி வைப்பாய்
அடி அழகின் ஓவியமே
அடி மனதில் நுழைந்து அணுவனுவாய்
என்னை அசைப்பது ஏன்?
என் இதயத்தில் நடந்த போரில்
ஆயுதம் இல்லாமலே என்னை நீ
வென்றுவிட்டய்.
நானும் கைதாகி வந்துவிட்டேன்
உன் இதயத்தின்
எந்த அறையினில் என்னை
பூட்டி வைப்பாய் என்று அறியாமலே!..
அனுமதிதான் கிடைப்பதில்லை
உன்னிடம் பேச சொல்லுது மனம்
என்னவென்று தெரியாமலே..
எழுத சொல்லுது தினம்
அது எதுவென்று புரியாமலே..
கானல் நீராய் காண்கிறேன்
கண்களை காணாமலே..
சிந்தித்த வேளையில் உன்னை சந்தித்துவிடுகிறேன் ஆனால்
உன் அனுமதிதான் கிடைப்பதில்லை
உன்னோடு உரையாட!..
அடை மழையின் பொழிவு
அடை மழையாய் கொட்டுகிறது
உன் ஞாபக துளிகள்..
ஆற்றாட்டு வெல்லத்தில் சிக்கிக்கொண்டேன்
நீந்தவும் முடியவில்லை -
நீரை எதிர்த்து நிற்கவும் முடியவில்லை.. அழகாகத்தான் இருக்கிறது
இந்த அடை மழையின் பொழிவு..
நீ கட்டிய பூக்கள்
கட்டிய பூக்களும், வேண்டாமென்று
கீழே கொட்டிய பூக்களும்
வருத்தத்தை வாரி வாரி கொட்டி தீர்த்தது
ஒரு பூவே, பூக்களை பூட்டி வைப்பது ஏன்?
நிராகரிப்பது ஏன்? என்று..
நீ கட்டிய பூக்கள் பேசிக்கொண்டதாம்
பிரிந்து கிடந்த நம்மை பாச நூலால் கட்டி
இணைந்திருப்பதால் வாசம் வீசுகிறோம் என்று!..
மலர்ந்த முகம்
உன்னை பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன்
மலர்ந்தால் உன் முகத்தை போல்
மலரவேண்டும்..
பேசினால் இன்முகதைப்போல்
பேசவேண்டும் என்று!
உன் கை பட்ட பூக்கள்
பூவே உன் கை பட்ட பூக்கள் அனைத்தும் சிறைப்படது உன் பாச கயிற்றில்(நூல்)!..
மலரும் முன் மலரின் ஏக்கம் இது!
மாட்டாமலே மாட்டிக்கொண்டவன்
கைகளில் மாட்டி கொண்டவள் நீ
மாட்டாமலே அதில் மாட்டிக்கொண்டவன் நான்
-உன் வளையல் ஓசையின் வளையத்தில்.
நான் உன் வலையில் மாட்டி கொள்ளதான்
நீ வளையளை மாட்டி கொண்டாயோ..?
என்னவளின் உதயம்
விடியும் வரை விண்ணும் எனக்கு
எதிரியாகத்தான் தெரிகிறது
எப்போது காண்பேன்
என்னவளின் உதயத்தை
அவளின் இதயத்தை!..
மதியோடுத்தான் இருக்கிறேன்
வானம் மதியோடுத்தான் இருக்கிறது
நானும் மதியோடுத்தான் இருக்கிறேன்
என் மதியை காண வேண்டுமென்ற
ஆவலோடு!..
மிதக்கிறாள்
மதியாக பார்க்கையில் என்னை மயகிறாள்!.
நதியாக பார்க்கையில் நெஞ்சில் மிதக்கிறாள்!.
ஆகையால் தான் இவளை நதியின் மதியாக பார்க்கிறேன்!..
நீங்காத நினைவுகள்
உன் விழிகளுக்கு ஏது அழைப்பிதழ்!.
அதில் விழுந்தவனுக்கே நீங்காத நினைவுகள்!.
என்று என்னை பாட சொல்லுது உன் புகழ்!.
தர்ப்பணம்
இயற்கையே இவள் அழகிற்கு இலக்கணம்!.
அவள் இமைகள் இமைக்கையில் விழுந்துவிட்டேன் ஒரு கணம்!.
அன்றிலிருந்து இவள் பெயரை சொல்லியே
செய்கின்றேன் தர்ப்பணம்!.
உன் சுடிதார் பூக்கள்
மேகங்கள் தூவிய பூக்களை காண்கிறேன்
மேடையில் மேனகையின் ஆடையில்
மேனி எங்கும் பூத்து குலுங்கும்
உன் சுடிதார் பூக்கள்!..
சாயலில் தோன்றும் பிம்பங்கள்
சாய்ந்து படுத்தாலும் சரி
சாலையில் நடந்தாலும் சரி
உன் சாயலில் தான் பிம்பங்கள்
மீண்டும் மீண்டும் சாரலாய் தூவுது
என் நெஞ்சில்!..
சிறைப்பட்டு கொள்கிறேன்
நான் கனவிழும் கானாத காட்சிகள்
உன் கண்களில் காண்கிறேன்!..
பிறை போன்ற நெற்றியில்
இமைகள் திரை போட்டு மறைக்கும் போது
சிறைப்பட்டு கொள்கிறேன்
உன் இதயத்தில்!..
ஊஞ்சல் ஆடும் ஊர்வசி
மலரே!..
உனக்கு பிடித்த மொழி மௌனமா..?
இல்லை உனக்கு பிடித்ததால் நீ மௌனமா..?
என் ஏக்கம்
உன் புன்னகையில் மட்டும் தான் தீருமா..?
பூக்கள் கூடி தேர்ந்தெடுத்த புன்னகை அரசி!..
என் நெஞ்சில்
ஊஞ்சல் கட்டி ஆடும் ஊர்வசி!..
என்றும் அரசி
ஏழையாக இருந்தாலும்
ஏகாம்பரமாக இருந்தாலும்
என்றும் அரசி தான்
நீ எனக்கு
என் இதயத்தில்!..
எழுத்துகளின் எழிலரசி
எழுத்துக்கும் எடை உண்டு
என்பதை உன் எழிலை பற்றி
எழுதும்போதுதான் அறிந்துகொண்டேன்!..
ஏட்டில் எழுத்துக்கள் கூட கூட
உன் எழிலும் கூடி கொண்டேதான்
இருக்கிறது!..
எழுதி எழுதி நான் ஏழையாகிவிட்டேன்!..
எழுத்துக்கள் அனைத்தும் உண்ணுடையதால்
எழுத்துகளின் எழிலரசி ஆகிவிட்டாய் நீ!..
எழுத மட்டுமே செய்கிறேன்
பிரியமாய் பேசும் என் சகி பிரியசகி!..
பூக்களால் நித்தம் நித்தம்
நான் வரையும் புத்தகம் அவள்.
படிக்க முடியவில்லை
எழுத மட்டுமே செய்கிறேன்!..
தொட்டதும் தோரணை
கண்ணே உன் ஞாபக கடலின்
ஆழத்தில் மூழ்கி முனைப்போடு
நீந்துகிறேன்
முன் உள்ள கரையை நோக்கி!..
தொட்டதும் தோரணையில்
ஆட தொடங்கி விடுகிறது
தொலையாத உன் நினைவுகள் மீண்டும்!..
மறைந்து போகிறாள்
நடமாடும் நிலவொன்றை காண்கிறேன்!..
அதன் கலையாத கருங்கூந்தலை
கலையாக பார்க்கிறேன்!..
நிலையான நில வடிவை
நினைவுகளால் சேர்கிறேன்!.
ஆனால் அவளின் மாயக் கண்ணை மட்டும்
மாற்றி மாற்றி வரைந்து பார்க்கையில்
நான் மறந்து போகிறேன்
அவள் மறைந்து போகிறாள்!..
தூங்கா விளக்கு
தூங்கதான் முயற்சிக்கிறேன்
தூங்காமல் தூங்கா விளக்கை போல்
உன் முகம் மட்டும் ஏன் நெஞ்சில் சுடர்விட்டு
அழகிய தீபமாய் எரிந்து கொண்டே இருக்கிறது
அச்சுடரின் அனல்
என்னை போட்டு அனத்தி எடுக்கிறது
வெளியில் சொல்லவும் முடியவில்லை வெப்பத்தை தாங்கவும் முடியவில்லை
ஆனாலும் அமைதி கொள்கிறேன்
அதில் உன் முகத்தை காணும்போது!..
இதயத்தின் பதிவுகள்
மலையில் ஒரு அழகிய பயணம்
மலர்ந்த மலரை தேடி - தேனீக்கள்!..
என்னுள் ஓயாமல் ஓர் அழகிய பயணம்
அழகிய உன் மனதை தேடி
- என் இதயத்தின் பதிவுகள்!..
ஆயுளையே அடகு வைக்க
திரும்பி திரும்பி பார்க்க வைத்த
ஆயிரம் ஆயிரம் பெண்களில்
என் ஆயுளையே அடகு வைக்க நினைக்கும்
ஒரே அழகி நீ மட்டுமே!.
இது என்ன மாயம்
இது என்ன மாயம்..?
இரவு முழுதும் பார்த்தாலும்
இவள் முகம் இன்னும் ஏதோ
புது புது அர்த்தங்களை தூவி
என் இதயத்தை இன்னும் தூங்க விடாமல் வைத்திருக்கிறது!..
பதிவிட்ட உன் புகைப்படம்
உன் திருமுகம் காண தீர்வெடுத்து
நீ பதிவிட்ட உன் புகைப்படத்தை
நான் தீராமல் பார்த்து கொண்டிருக்கிறேன்
தினம் ஒரு முறை அல்ல
ஓராயிராம் முறை!.
காணாமல் போகிறேன்
கண்ணே உன் கன்னம்
ஏன் இத்தனை அழகு..?
அதை காணும் போதெல்லாம்
நான் காணாமல் போகிறேன் -
அந்த கண்ணக்குழியில் விழுந்து!..
இது உண்மை தான்
இதில் விழுந்தவன் நான் இன்னும் எழவில்லையே!..
!
என் நிலவு
வெண்ணிலவுக்கும் என் நிலவுக்கும்
சிறு வித்யாசம்!..
இவளை கண்டதும் இவ்வுலகமே
வெளிச்சமானால் அது வெண்ணிலவு!..
என் இதயமே வெளிச்சமானல்
அது என் நிலவு!..
எத்தனை அழகு பாருங்கள்
வெண்ணிலவுக்கு எத்தனை பயம் பாருங்கள்!..
இரவெல்லாம் பயணித்து
என் இனியவளை கண்டதும்
ஓடி ஒளிந்து கொள்கிறது
வானத்தின் பின்புறம்!..
என் நிலவுக்கு எத்தனை அழகு பாருங்கள் நெஞ்சிக்குள் உறங்கும் போதும்
நேரில் உரையாடும் போதும்!..
இதயம் என்னும் வங்கி
பார்த்து பார்த்து விழியின் வழி வாங்கிய
உன் அழகை என் இதயம் என்னும் வங்கியில்
நிலையான வைப்பு நிதியில் தான் வைத்தேன்!..
இன்று இரு மடங்கு அல்லாமல்
அது பலமடங்காய் மாறி
பகல் என்றும் பாராமல்
என்னை பாடாய் படுத்துகி்றது!.
பூவால் செய்த புத்தகம்
நீதான் பூவால் செய்த புத்தகமா..?
உன் இதழ்களை இதமாய் புரட்டி புரட்டி
ஆவலோடு படித்துக் கொண்டிருக்கிறேன்
அணுவளவும் அசையாமல்!..
ஆனாலும் பல பக்கங்கள்
இன்னும் புரியாத புதிராகவே உள்ளது!..
வாழ்த்துங்கள்
பெண்கள் இன்று ஒரு நாள் மட்டும் சிறப்புக்கு
உரியவர்கள் அல்ல
வாழும் நாள் வரை சிறப்புக்கு உரியவர்களே
வாழ்த்துங்கள் அவர்களை வாழ்வில்
அன்பான நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்!..
முகம் பார்க்கும் கண்ணாடி
என் முகம் பார்க்கும் கண்ணாடி
உன் முகத்தை எங்குதான்
மறைத்து வைத்து இருக்குமோ தெரியவில்லை.
முன் நின்று பார்க்கும் போதெல்லாம்
மின்னலாய் உன் அழகை
திரையில் பதித்து விட்டு செல்கிறது..
பார்வை மயக்கம்
மயங்கி தான் பாயில் படுத்திருக்கிறேன்..
பசி மயக்கமல்ல பாவையின் பார்வை மயக்கம்!.
அதை அவளிடம் சொல்வதில் தான்
எத்தனை தயக்கம் பாருங்கள் எனக்கு!..
ராஜகுமாரி
அனு தினமும் இரவின் மடியில்
விடிய விடிய கட்டிய
என் ராஜங்கத்தின் ராஜகுமாரி
அங்கே உறங்கி கொண்டிருப்பதாய்
இங்கே நான் உளறி கொண்டிருக்கிறேன் நான் உறக்கத்தில்!..
மூடித்தான் வைக்கின்றேன்
முக்காடு போட்டு முக்காளியில்
மூடித்தான் வைக்கின்றேன்
அது ஏனோ நிக்காமல்
உன்னிடமே வந்து வந்து
நின்றுகொள்கிறது
யாரிடமும் சிக்காமல்.
- என் மனம்
ஊஞ்சல் ஆடுகிறாய்
என் உள்ளத்தில்
குதுகலமாய் ஊஞ்சல் ஆடுகிறாய்
குமரியாக அல்ல
அழகிய குழந்தையாக!..
ஆனால்
என் உள்ளமோ
உன்னிடம் சிக்கிக்கொண்டதால்
உலுக்கி உலுக்கி உரு தெரியாமல்
உரித்து எடுக்கிறாயே இது நியமா..?
குறுஞ்செய்தி
மனம் ஓரமாய்
ஒட்காந்து ஒட்காந்து
ஓயாமல் ஒரு நாள் முழுதும்,
காத்திருக்கிறது
குறிஞ்சி போன்ற -
உன் குறுஞ்செய்தியின் வருகைக்காக!..
வார்த்தைகள் வஞ்சனை செய்கிறது
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் வஞ்சனை செய்கிறது!.
வள்ளுவனிடமிருந்து வார்த்தைகளை
வரவழைத்து வானுயர்ந்த கோபுரத்தில்
வரி வரியாய் உன்னை
வரைந்து கொண்டிருக்கிறேன்
வஞ்சிக்கொடி உன் ஓவியத்தை!.
வாயுதேவனும் வாயடைத்து நிற்கிறான் இவ்வார்தைகளுக்கு உரியவள் யார்..? என்று!.
ஒளியோடு காத்திருக்கிறேன்
வழி மீது விழி வைத்து
ஒளியோடு காத்திருக்கிறேன்
வஞ்சியவள் நீ வருவாயென்று!..
உன் கொஞ்சல் பேச்சை கேட்க
என் நெஞ்சமெல்லாம் ஏங்கி தவிக்கிறது!..
வசந்த கால தென்றல்
மூடியே கிடந்த
என் வீட்டு ஜன்னலை
முழுதாய் இன்று திறந்தே வைத்திருக்கிறேன்
என் வசந்த கால தென்றல்
என்று வருமோ என்று!..
கற்பனையில் விற்பனை செய்கிறது
முப்பொழுதும் மூடி மூடி வைத்த
உன் கற்பனையில்
விற்பனை செய்து கொண்டே இருக்கிறது
உன் நினைவுகளை!..
ஏன் இந்த படபடப்பு
நெஞ்சில் ஏன் இந்த படபடப்பு!..
அவள் பளிங்கு முகத்தை
காணாமல் எத்தனை பரிதவிப்பு!..
அருகில் இருந்து பார்த்தால்
அம்பேடுத்து எய்வது போல் இருக்கும்
அவள் விழி அமைப்பு!..
நேர் எதிரே வந்தால்
நான் சிலை போல் நிற்பதே அவளின் சிறப்பு!..
திரையிட்டு மறைக்கதே
நேரம் நீண்டு கொண்டே செல்கிறது!..
உன் நேபாகம் நெஞ்சில் தூண்டி
கொண்டே செல்கிறது!..
முறையிட்டு பார்க்கும்போது நீ
திரையிட்டு மறைக்கதே
உன் கண்ணக் குழியின் அழகை!.
காயமும் இல்லை,
நெஞ்சில் கணமும் இல்லை
இருப்பினும் ஏதோ ஒரு விதமான வலி
என்னை ஏங்கதான் செய்கின்றது
உன்னோடு உரையாட!.
நூறாயிரம் கவிதைகள்
பெண்ணே உன் பார்வைக்கு
ஓராயிரம் என்ன
நூறாயிரம் கவிதைகள் எழுதலாம்!..
ஆனால்!.. ஒவ்வொரு
ஆயிரம் கவிதைக்கும்
முதல் வரிகளாய் வந்து நிற்பது
நிலவின் நிழல் போன்ற உன் முகமும் தான்
ஞாபக துளிகள்
சாலையில் பயணிக்கும் போதெல்லாம்
சாரலாய் உருவெடுத்து
சலிக்காமல் தூவுது
உன் ஞாபக துளிகள்!.
சாயம் போன் சேலை
சாயங்கால வேலையிலும்,
சாயம் போன சேலையிலும்
பூத்து பூத்து குழுங்குது
உன் அழகிய சிரிப்பு!.
காந்த விழிகள்
ஆண்டாண்டாய் அருகில் தான் இருக்கிறது
ஆனால்
ஒன்றை மற்றொன்று
காணாமல் இருப்பது ஏன்?!..
பார்த்துகொண்டால்
இரண்டும் ஒன்றை ஒன்று
ஈர்த்து கொள்ளுமாம்
-உன் காந்த விழிகள்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்
உங்களின் கருத்துக்கள்
Copyright © TamilPrograms.in, All Right Reserved.