சிதறி கிடக்கும் பூக்கள்
நீல வண்ணத்தில் கோடி கோடியாய்
கொட்டி சிதறி கிடக்கும் பூக்கள்.
பார்க்க பார்க்கத்தான் அழகு
ஆகையால் பார்க்க தான் முடியும்
யாரும் பறிக்க முடியாது.
மாலையில் தோன்றுவதால் அதை
மாலையிட முடியாது..
மாலையில் இடவும் முடியாது!..
வானத்து வின்மீனே இரவுக்கு அழகு சேர்கிறாய்
என் இனியவளை காண இடம் கேட்கிறாய்!.
இனி அவளை காண இயலாது
ஆகையால் என் இமை காணும்
அற்புத உலகிற்கு உன்னை அனுப்பி வைக்கிறேன்..
இருந்து விருந்து எடுத்து வா காலையில் காத்திருப்பேன் உனக்காக!..
உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்
Copyright © TamilPrograms.in, All Right Reserved.
உங்களின் கருத்துக்கள்